வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2019 (13:28 IST)

தமிழகத்தின் தங்கமகள் கோமதிக்கு ரூ. 10 லட்சம் பரிசு : ஸ்டாலின் அறிவிப்பு

கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப்போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து.
23 ஆவது ஆசிய தடகளப்போட்டிகள் தற்போது கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதாகும் கோமதி இந்த தொடரில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
கோமதி பந்தய தூரத்தை 2 நிமிடம் 70 வினாடிகளில் கடந்து அவரது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த கோமதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில்ட் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தங்கமகள் கோமதி,மற்றும் ஆரோக்கியராஜீவுக்கு பரிசு தொகை அறிவித்திருக்கிறார்.
 
இதுபற்றி ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
 
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்றும் , 400 மீ, ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கியராஜீவுக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
 
மேலும் இந்தியாவுக்கான இருவரது சாதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.