1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூலை 2023 (09:11 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுகிறதா பாகிஸ்தான்? பிரதமரின் அதிரடி அறிவிப்பு..!

pakistan bowler
உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி..!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி கொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
 
சென்னை பெங்களூர் அகமதாபாத் உட்பட ஐந்து இடங்களில் பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்த நிலையில் அகமதாபாத் உள்பட ஒரு சில மைதானங்களில் விளையாட பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்பலாமா? வேண்டாமா?  என்பது குறித்து ஆய்வு செய்ய பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் வெளியூர் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளதாகவும் அந்த குழு போட்டி நடைபெறும் இடங்களில் உள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து இறுதி முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. 
 
பாகிஸ்தான் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் இருந்து வரும் தகவலின் படி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் விளையாட வாய்ப்பு குறைவு என்றே கூறப்பட்டு வருகிறது
 
Edited by Siva