திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 ஜூன் 2023 (10:38 IST)

டிக்ளேர் செய்தது தப்போ? இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே தற்போது ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 393 என்ற நிலையில் டிக்ளர் செய்தது. 
 
இதனை அடுத்து ஆஸ்திரேலியா தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில் அந்த அணி நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இதே ரீதியில் சென்றால் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட அதிகமாக ஆஸ்திரேலியா அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா  அணியின் தொடக்க ஆட்டக்காரர் காவஜா அபாரமாக விளையாடி சதமடித்தார் என்பதும் அதேபோல் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேர்ரி ஆகியோர் அரைசதங்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆஸ்திரேலியா பேட்டிங்கை பார்க்கும்போது அவசரப்பட்டு டிக்ளேர் செய்து விட்டோமோ என்று இங்கிலாந்து அணியினர் எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
 
Edited by Siva