1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 17 ஜூன் 2023 (08:09 IST)

ஓவரின் ஆறு பந்துகளிலும் விக்கெட் வீழ்த்திய 12 வயது சிறுவன்!

ஓவரின் ஆறு பந்துகளிலும் விக்கெட் வீழ்த்திய 12 வயது சிறுவன்!
கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்களை வீழ்த்துவது ஹாட்ரிக் விக்கெட் என அழைக்கபடுகிறது. ஆனால் இது ஒரு அரிதான நிகழ்வாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள 12 வயது சிறுவனான ஆலிவர் தனது ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் 6 விக்கெட்களை வீழ்த்தி டபுள்ஹாட்ரிக் எடுத்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் நடந்த போட்டியில் குக்ஹில் என்ற அணிக்கு எதிராக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதன் பின்னர் தான் வீசிய மற்றொரு ஓவரிலும் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த போட்டியில் 2 ஓவர்களை வீசிய ஆலிவர் ரன்களே விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.