தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் கார்ல்ஸனை வீழ்த்திய தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா!
- ரஷ்ய விமானங்கள் பறக்க தடை: இத்தாலி அறிவிப்பு
- இந்தியாவின் 73 ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக 14 வயது சிறுவன்!
- இத்தாலியில் நடந்த செஸ் போட்டியில் சென்னை சிறுவனுக்கு சாம்பியன் பட்டம்!
- இத்தாலியில் இருந்து தொற்றைக் கொண்டு வந்த விமானம்! – 125 பேருக்கு கொரோனா!
நடப்பு சாம்பியன் இத்தாலியை வீழ்த்தி சாதனை! – Finalissima கோப்பையை வென்ற அர்ஜெண்டினா!
யூரோ சாம்பியன் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது அர்ஜெண்டினா அணி.
உலக கால்பந்து அணிகள் இடையேயான யூரோ சாம்பியன் Finalissima கோப்பை போட்டி ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த போட்டியின் இறுதியில் நடப்பு சாம்பியனான இத்தாலி அணியும், லியோனல் மெஸ்சி பங்கேற்றுள்ள அர்ஜெண்டினா அணியும் மோதிக்கொண்டன.
விருவிருப்பாக நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணியின் மார்டினெஸ், ஏஞ்சல் டி மரியா, பாவ்லோ டைபாலா ஆகியோர் ஆளுக்கு ஒரு கோல் அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினர். அர்ஜெண்டினாவின் அதிரடி ஆட்டத்தை இத்தாலியால் சமாளிக்க முடியவில்லை. இதனால் ஒரு கோல் கூட அடிக்காமல் 0-3 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவிடம் தோல்வியை தழுவியது இத்தாலி.
அடுத்த கட்டுரையில்
