செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (14:34 IST)

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மோசடி: சுப்பிரமணியசாமி டுவிட்டால் பரபரப்பு

swamy
ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது மோசடி என பாஜக எம்பி சுப்பிரமணியசாமி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத் அணியிடம் சரணடைந்தது என்றே கூறலாம்
 
இந்த நிலையில் இந்த இறுதிப் போட்டி குறித்து கருத்து கூறிய சுப்பிரமணியன் சாமி ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன
 
அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக இருக்கிறார். இந்த விவகாரத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்வது அவசியமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். சுப்ரமணிய சாமியின் இந்த டுவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது