ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 ஏப்ரல் 2021 (08:48 IST)

பந்துவீச்சில் கலக்கி பேட்டிங்கில் சொதப்பிய ரஸ்ஸல்!

ஐபிஎல் 2021 சீசனின் ஐந்தாவது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த மும்பை அணியை கடைசியில் தனது இரண்டு ஓவர்களில் நிலைகுலைய வைத்தார் ஆண்ட்ரு ரஸ்ஸல். அவர் வீசிய 2 ஓவர்களில் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார். இதனால் மும்பை கடைசி கட்டத்தில் 152 ரன்களுக்கு சுருண்டது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் 15 பந்துகளில் வெறும் 9 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்விக்கு முக்கியக் காரணமானார். இதனால் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கையில் இருந்த வெற்றியை நழுவ விட்டது.