புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 ஏப்ரல் 2021 (08:05 IST)

தியேட்டரில் தனது படத்தைப் பார்த்த நடிகை… கொதித்தெழுந்த ரசிகர்கள்!

நடிகை நிவேதா தாமஸ் தான் நடித்த வக்கீல் சாப் படத்தை பாதுகாப்பு உபகரணங்களோடு சென்று திரையரங்கில் பார்த்துள்ளார்.

நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோன இருப்பதாக ஏப்ரல் 3 ஆம் தேதி செய்திகள் பரவின. அவரின் சக நடிகையான அஞ்சலி கொரோனா தொற்றுக்கு ஆளானதே இதற்குக் காரணம். ஆனால் நிவேதா தனக்கு கொரோனா இல்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ரிலீஸான அவர் நடித்துள்ள வக்கீல் சாப் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து அதன் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் கொரோனா வந்த ஒரே வாரத்தில் எப்படி நீங்கள் பொது இடத்துக்கு செல்லலாம் எனக் கூறி ரசிகர்கள் திட்ட ஆரம்பித்துள்ளனர்.