Red Zone-களில் கடும் நடவடிக்கை: ஸ்ரிக்ட்டாய் சொன்ன மோடி!!
மாநில முதல்வர்களுடம் பிரதமர் மோடி 5வது முறையாக இன்று ஆலோசனை நடத்தியது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
ஆனாலும், இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யவும், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடம் பிரதமர் மோடி 5வது முறையாக இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என மோடி கோரியுள்ளார். மேலும், சிவப்பு மண்டலங்களில் கடும் நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல்வர்களுக்கு மோடி அறிவுறுத்தியும் உள்ளார்.