செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (16:27 IST)

நான் பந்துவீச கஷ்டப்பட்ட 3 பேட்ஸ்மேன்கள்… லெஜண்ட் பவுலர் பகிர்வு!

தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் தான் பந்துவீசுவதற்கு சிரமப்பட்ட பேட்ஸ்மேன்கள் பற்றி பேசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி உருவாக்கிய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஆலன் டொனால்ட் முக்கியமானவர். 1999 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அவர் ரன் அவுட் ஆனதால் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா இழந்தது. அதன் பின்னர் சில ஆண்டுகளில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தன் காலத்தில் அச்சுறுத்தும் பவுலராக வலம் வந்த ஆலன் டொனால்ட் தான் பந்துவீச சிரமப்பட்ட பேட்ஸ்மேனள் குறித்து பேசியுள்ளார். அதில் ‘சச்சின், லாரா மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு மட்டுமே தன்னால் எளிதாக பந்துவீச முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.