வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (16:29 IST)

தோனி இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் – அஜித் அகர்கார் அறிவுரை!

சென்னை அணியின் கேப்டன் தோனி முதல் 5 வீரர்களுக்குள் களமிறங்க வேண்டும் என முன்னாள் பந்து வீச்சாளர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதிய சிஎஸ்கே அணி பெரும் தோல்வியை தழுவியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுவரையிலான 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்ற சிஎஸ்கே அணி தரவரிசையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தோல்வி குறித்து பேசிய தோனி “இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை” என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தோனி வரும் போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். அதில் ‘தோனி முதல் 5 பேட்ஸ்மேன்களுக்குள் களத்தில் இறங்க வேண்டும். பிற வீரர்களால் பார்க்க முடியாத சூழ்நிலைகளை பார்த்து அதற்கேற்றார் போல தகவமைத்துக் கொள்பவர் தோனி.’ எனக் கூறியுள்ளார்.