வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (13:23 IST)

ஃபர்ஸ்ட் பம்முவோம்; ரெண்டாவதா வந்து கும்முவோம்! – ஜாம்பவான்களை தோற்கடித்த கிங்ஸ் லெவன்

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்கொண்ட கிங்ஸ் லெவன் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இனி தொடர் வெற்றிகளை பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து இரண்டாம் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. முதல் சுற்றிலிருந்தே வெற்றிக்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் கே.எல்.ராகுலின் கிங்ஸ் லெவன் அணி ஆரம்பத்தில் நூலிழையில் தோல்விகளை கண்டாலும் இரண்டாவது சுற்றில் வெற்றியை ருசி பார்த்து வருகிறது.

முதல் சுற்றில் கிங்ஸ் லெவன் அணி சக ஜாம்பவான் அணிகளான டெல்லி கேப்பிட்டல்ஸிடம் சூப்பர் ஓவர் வரை சென்று ஒரு ரன்னில் தோல்வியும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் சுற்றில் அதே டெல்லி கேப்பிட்டல்ஸை 3 ரன்கள் வித்தியாசத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியை சூப்பர் ஓவர் வரை சென்று 4 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்துள்ளது.

இப்படியாக கிங்ஸ் லெவன் அணி தொடர்ந்து விளையாடினால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என கிங்ஸ் லெவன் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.