திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 5 ஜூலை 2023 (08:15 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர்: முன்னாள் வீரர் நியமனம்

Ajit Agarkar
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக முன்னாள் பந்து பேச்சாளர் அஜித் அகர்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருகுறித்து அறிவிப்பை பிசிசிஐ  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்த நிலையில் இந்த விண்ணப்பங்களை அசோக் மல் ஹோத்ரா, ஜதின் பரன்ஜேப், சுலக்சனா நாயக்  குழு ஆய்வு செய்தது.
 
இந்த நிலையில் தற்போது அஜித் அக்ரகரை தேர்வு குழு தலைவராக தேர்வு செய்துள்ளது. சீனியாரிட்டி அடிப்படையிலும் அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற அடிப்படையிலும் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு தலைவராக அஜித் அகர்கரும், சிவ் சுந்தர் தாஜ், சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva