1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (17:11 IST)

ஐபிஎல் போட்டியை அடுத்து ஐ.எஸ்.எல் போட்டியும் உறுதி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஐபிஎல் போட்டியை அடுத்து ஐ.எஸ்.எல் போட்டியும் உறுதி
ஐபிஎல் போட்டிகள் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விக்குறி கடந்த சில மாதங்களாக இருந்த நிலையில் சமீபத்தில் இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்டில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள 8 அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர் என்பதும் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை அடுத்து ஐஎஸ்எல் போட்டியும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது நடப்பாண்டு ஐஎஸ்எல் கால்பந்து தொடர் போட்டி நடைபெறும் என அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்துள்ளது 
 
நவம்பர் மாதம் தொடங்க உள்ள இந்த கால்பந்து தொடர் போட்டி கோவாவில் நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரசிகர்களின்றி இந்த போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ஐபிஎல், ஐ.எஸ்.எல் போட்டிகளை அடுத்து மேலும் சில போட்டிகளை தொடங்கவும் விளையாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் கொஞ்சம் கொஞ்சமாக நோய் பாதிப்பில் இருந்து இந்தியா உள்பட உலக நாடுகள் மீண்டு வருவதையே இது காட்டுவதாகவும் கூறப்படுகிறது