ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (15:14 IST)

தோனியின் கைகள் பிக்பாக்கெட் அடிப்பவரை விட வேகமாக செயல்படும் – ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் அவரது இந்த முடிவு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், தோனி விக்கெட் கீப்பிங் செய்யும்போது, பிக்பாக்கெட் அடிப்பரைவிட வேகமாக செயல்படுவார். தோனி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளையும் தனதாக்கிக்கொண்டார் எனப் புகழாரம் கூட்டியுள்ளார்.