வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:07 IST)

தோனி இல்லாம சிஎஸ்கேவா? அடுத்த ஆண்டு கேப்டன் யார்? – காசி விஸ்வநாதன் விளக்கம்

இந்த ஆண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே மோசமான ஆட்டத்தை அளித்துள்ள நிலையில் அணி கேப்டன் மாற்றப்பட உள்ளதாக வெளியான செய்தி குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ப்ளே ஆஃப் தகுதியை இழந்த முதல் அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தோல்விக்கு கேப்டன் தோனியின் போதாமையே காரணம் என சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு அணி கேப்டன் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

இதற்கு பதிலளித்துள்ள சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் “சிஎஸ்கே அணிக்கு இது ஒரு சிறிய அளவிலான பாதிப்புதான். தொடரும் காலங்களில் சிஎஸ்கே சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது. அணி கேப்டனை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை, அடுத்த ஆண்டும் கேப்டனாக தோனியே தொடர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என கூறியுள்ளார்.