திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:45 IST)

அரைசதம் அடித்து தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிய மன்தீப் – உருக்கமான நிகழ்வு!

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மன்தீப் சிங் நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்து வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46வது போட்டியான நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி கெய்ல் மற்றும் மன்தீப் சிங் ஆகியோரின் சிறப்பான அரைசதத்தால் எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்காக மன்தீப் அதிகபட்சமாக 66 ரன்களை சேர்த்தார். அவரின் தந்தை இந்தியாவில் உடல்நலக் குறைவு காரணமாக இறந்து மூன்று நாட்களே ஆன நிலையில் இறுதி சடங்குக்கு செல்ல முடியாத சூழலில் நேற்றைய அரைசதத்துக்குப் பின் மன்தீப் வானத்தை நோக்கி தன் தந்தையிடம் ஆசி வாங்கினார். மேலும் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மன்தீப்பின் ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.