1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 மார்ச் 2022 (11:56 IST)

24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட பயணமாகியுள்ளது.

பாகிஸ்தானின் அரசியல் சூழல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக எந்த ஒரு கிரிக்கெட் அணியும் அங்கு சென்று விளையாடுவதை தவிர்த்து வந்தன. ஆனால் பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் அவ்வப்போது சென்று விளையாடி வந்தன.

இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கடைசியாக 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு செல்லும் ஆஸி அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தானும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் மோத உள்ளன.