செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (15:51 IST)

இந்தியாவின் தேசியகொடியை பயன்படுத்திய பாகிஸ்தான் மாணவர்கள்

ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீது படையெடுத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று  7 வது நாளாகத் தொடர்ந்து போர் நடந்து வருகிறது.

நேற்று , உக்ரைனில் , கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த   நவீன் என்ற மாணவர், ரஷ்ய படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்தது.

இ ந் நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,   ரஷ்யா,  உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்துள்ளது.

இதற்கிடையே,  உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பாகச்  செல்லவெண்டிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை பயன்படுத்தி நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகிறது..