ஒரு போட்டியில் கூட ஜெயிக்காத ஆப்கானிஸ்தான்: கேப்டன் அதிரடி மாற்றம்

Last Modified வெள்ளி, 12 ஜூலை 2019 (22:01 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத அணி என்று ஒன்று இருக்கின்றது என்றால் அது ஆப்கானிஸ்தான் அணி என்பது அனைவரும் தெரிந்ததே. ஒன்பது லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றே கருதப்பட்டது
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தற்போது வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒருநாள் போட்டிகளுக்கு நெய்ப், டெஸ்ட் அணிக்கு ரஹ்மத் ஷா மற்றும் டி20 அணிக்கு ரஷித் கான் கேப்டனாக இருந்து வந்த நிலையில் இனிமேல் மூன்று வகை போட்டிகளுக்கும் ரஷித்கான் கேப்டனாக செயல்படுவார் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. துணை கேப்டனாக முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய கேப்டன் ரஷித்கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி முதல்கட்டமாக வரும் செப்டம்பரில் வங்கதேச அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் முடிவடைந்ததும்
நவம்பர் 5 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. கேப்டனை மாற்றிய பின்னராவது ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை குவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :