புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (23:00 IST)

சின்ன கேப்டன் சண்முகப்பாண்டியனின் அடுத்த பட டைட்டில் இதுதான்!

கேப்டன் விஜயகாந்த் மகன் சின்ன கேப்டன் சண்முகப்பாண்டியன் ஏற்கனவே சகாப்தம் மற்றும் மதுர வீரன் என இரண்டு படங்களில் நடித்திருந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இந்த பூஜையில் பிரேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'மித்ரன்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சண்முகப்பாண்டியன் தந்தையை போல் கம்பீரமான போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக  ரோனிகா சிங் என்ற நடிகை நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் வம்சிகிருஷ்ணா நடிக்கவுள்ளார். 
 
இந்த படத்தை பூபாலன் என்ற இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த 'வீரம்', 'வேதாளம்', மற்றும் 'விவேகம்' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்ராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார். ஜி எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு பாடல்கள் மற்றும் வசனங்களை கவிஞர் அருண்பாரதி எழுதவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது