செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:54 IST)

பாகிஸ்தானை வீழ்த்தி அதிரடி! ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணி!

India Hockey team
ஓமனில் நடைபெற்ற ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.



சர்வதேச ஹாக்கி பெடரேஷன் ஓமனில் நடத்திய ஆண்கள் ஹாக்கி 5’ஸ் ஆசியக்கோப்பை போட்டி விருவிருப்பாக நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டியில் நேற்று இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதிக்கொண்டன.

பரபரப்பான இந்த போட்டியின் முடிவில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை  வென்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் 2024ம் ஆண்டு ஓமனில் நடைபெற உள்ள 5’ஸ் உலகக்கோப்பை போட்டிகளுக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

Edit by Prasanth.K