வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (08:31 IST)

ஆசியக் கோப்பை ஹாக்கி.. இன்று அரையிறுதியில் ஜப்பானை எதிர்கொள்ளும் இந்தியா!

இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய ஆறு நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 

கடந்த சில நாட்களாக லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்போது லீக் போட்டிகள் முடிந்து அரையிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இன்று நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி லீக் போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் மூன்று வெற்றி மற்றும் ஒரு டிராவோடு சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. இந்தியா லீக் போட்டிகளில் சீனாவை 7-2 என்றும், மலேசியாவை 5-0 என்றும், தென் கொரியாவை 3-2 என்றும் வென்றது. ஜப்பானுடனான போட்டியில் 1-1 என்று டிரா செய்தது.