திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 12 ஆகஸ்ட் 2023 (08:29 IST)

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர்… அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய ஆறு நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நாக் அவுட் போட்டிகள் தொடங்கின.  நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் மோதின. இதில் இந்திய அணி அபாரமாக விளையாடி ஜப்பானை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இதன்  மூலம் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

நேற்று நடந்த இன்னொரு அரையிறுதி போட்டியில் தென் கொரியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. அதில் மலேசியா அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று நடக்கும் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.