வழக்கம் போல் வந்த வேகத்தில் வெளியேறிய ரோகித் சர்மா!

India
Last Updated: சனி, 24 பிப்ரவரி 2018 (21:56 IST)
மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மா வந்த வேகத்தில் 12 ரன்களுடன் வெளியேறினார்.

 
டி20 போட்டி தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி களமிறங்கியுள்ளது. 
 
விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மூன்று டி20 போட்டிகளில் சொதப்பினார். முதல் டி20 போட்டி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்து 21 ரன்களில் வெளியேறினார்.
 
இரண்டாவது டி20 போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். தற்போது இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் 12 ரன்களுடன் வெளியேறினார். மூன்று போட்டிகளிலும் ஜூனியர் டாலா பந்தில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :