1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (19:43 IST)

எங்கள் அணியில் இவர்கள் போல் யாரும் இல்லாததே தோல்விக்கு காரணம்; தென் ஆப்பிரிக்கா கோச்

எங்கள் அணியில் புவனேஷ்வர்குமார், பும்ரா போன்று அனுபவ பந்துவீச்சாளர்கள் இல்லாததே தோல்விக்கு காரணம் என தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறியுள்ளார்.

 
தென் ஆப்பிக்காவிற்கு எதிரான டி20 போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் தோல்வி குறித்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறியதாவது:-
 
தோல்வியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் எங்கள் அணியில் நிறைய வீரர்கள் காயத்தால் விளையாட முடியாமல் போனது. இதனால் புதிய வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு ஏற்ப தயார் படுத்த முடியவில்லை.
 
பந்துவீச்சில் எங்களுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்திய அணியில் புவனேஷ்வர்குமார் மற்றும் பும்ரா ஆகியோர் அனுபவ பந்து வீச்சாளர்களாக உள்ளனர். கடைசி ஓவர்களில் நேர்த்தியாக பந்துவீசி நெருக்கடி தருகின்றனர். எங்களிடம் இவர்கள் போன்று அனுபவ பந்துவீச்சாளர்கள் இல்லை என்று கூறியுள்ளார்.