1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (10:13 IST)

இந்தியாவில் 44.65 லட்சம் கொரோனா பாதிப்புகள்! – மோசமடையும் நிலவரம்!

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா கொரோனா பாதிப்பில் உலக அளவில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 95,735 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் மற்ற நாடுகளில் நாளொன்றுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்த பாதிப்பு 44,65,864 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையிலும் மொத்தமாக 75,062 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 34,71,784 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.