புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:16 IST)

ரஃபேலுக்கு அனைத்து மதப்படி பூஜை போட்டாச்சு... அடுத்து என்ன??

இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ரஃபேல் விமானத்துக்கு அனைத்து மதப்படி பூஜை மேற்கொள்ளப்பட்டது. 
 
இந்திய விமானப்படைக்காக 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்க 2016ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானங்களை கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக் கொண்டார்.
 
இந்த விமானங்கள் கடந்த மே மாதமே இந்தியா வர இருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் விமானங்கள் ஒப்படைப்பு பணி தாமதமானது. இருப்பினும் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி பிரான்சில் இருந்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.
 
இந்த 5 விமானங்களும் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன. எனவே, இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ரஃபேல் விமானத்துக்கு அனைத்து மதப்படி பூஜை மேற்கொள்ளப்பட்டது. 
 
அம்பாலா விமானப்படைதளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றுள்ளார். அதோடு இந்திய விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இந்த ரஃபேல் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளது.