வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (18:40 IST)

பந்தை சேதப்படுத்தினால் 6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை; ஐசிசியின் புது முடிவு

பந்து சேதப்படுத்தப்படும் விவகாரத்தில் அதிக தண்டனை வழங்க முடிவு செய்துள்ள ஐசிசி, வீரர்களுக்கு 6 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

 
பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் சிக்கி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், வார்னர் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஆஸ்திரேலிய அணியை பலமாக பாதித்தது குறிப்பிடத்தக்கது.
 
இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை கேப்டன் சிக்கினார். பந்து சேதப்படுத்தும் விவகாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதற்கு முற்று புள்ளி வைக்க ஐசிசி புது முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
 
இனி பந்து சேதப்படுத்தப்படும் விவகாரத்தில் சிக்கும் வீரர்களுக்கு 6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.