வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 ஜூன் 2018 (12:36 IST)

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு தடை

செய்ண்ட் லூசியாவில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கிய இலங்கை அணி கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு ஐசிசி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது.
 
வெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆம்பயர்கள் அலீம் தார் மற்றும் இயான் கோல்டு இலங்கை அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியாக சந்தேகம் அடைந்தனர். 

இதன்பின்னர் இது குறித்து இலங்கை அணியின் கேப்டன் சண்டிமாலிடம் விவாதித்தனர். இதனால் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் 2 மணி நேரம் கழித்து ஆரம்பித்தது. இதையடுத்து ஐசிசி, இந்த சர்சை குறித்து போட்டி முடிந்த பிறகு விசாரிக்கப்படும் என தெரிவித்தது.
 
அதன்படி நடந்த விசாரணையில் இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமாலின் மீதான குற்றம் நிருப்பிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 2 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் சன்டிமால் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.