1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. 3rd ODI over reduced as 47

இந்தியா - இலங்கை 3வது ஒருநாள் போட்டி: மழை காரணமாக ஓவர்கள் குறைப்பு

இந்தியா
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி களத்தில் இறங்கி விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணி 23 ஓவர்கள் விளையாடி முடித்த நிலையில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக தற்போது 47 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்று முன் வரை இந்திய அணி 28 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதிவ்ஷா 49 ரன்களும் சஞ்சுஜான்சன் 46 ரன்களும் எடுத்து அவுட் ஆகியுள்ள நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர் 
 
இந்திய அணி இந்த போட்டியில் வென்றால் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை ஒயிட்வஷ் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இலங்கை அணிக்கு 226 இலக்கு கொடுத்த இந்தியா!