இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கிய பாகிஸ்தான்: 349 இலக்கு

Last Modified திங்கள், 3 ஜூன் 2019 (20:00 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 105 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் விஸ்வரூபம் எடுத்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்துள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் முதலில் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கியதால் ரன்ரேட் மின்னல் வேகத்தில் ஏறியது. முகமது ஹபீஸ் 84 ரன்களும், பாபர் அசாம் 63 ரன்களும், சர்பாஸ் அகமது 55 ரன்களும், இமாம் உல் ஹக் 44 ரன்களும், ஃபாகர் ஜமான் 36 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் வோக்ஸ், எம்.எம்.அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், வுட் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்த நிலையில் 349 என்ற இமாலய இலக்கை நோக்கி தற்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர். சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :