1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (19:26 IST)

3 ஒருநாள், 3 டி20: முழுமையான வெற்றி பெற்ற பாகிஸ்தான்!

3 ஒருநாள், 3 டி20: முழுமையான வெற்றி பெற்ற பாகிஸ்தான்!
ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் பாகிஸ்தானுக்கு சென்று 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. முதல் கட்டமாக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஜிம்பாப்வே அணி மூன்றிலும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகளிலும் தோல்வி அடைந்திருந்த ஜிம்பாப்வே அணி இன்று மூன்றாவது டி20 போட்டியில் விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது 
 
இதனை அடுத்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 என இரண்டிலும் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது