திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2020 (10:48 IST)

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இழந்த ஜிம்பாப்வே!

பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை ஜிம்பாப்வே அணி இழந்துள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான். முதல் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், நேற்று நடந்த இரண்டாவது போட்டியையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.