செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (09:38 IST)

காமன்வெல்த் கிரிக்கெட்: 71 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து, அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து!

eng vs new
காமன்வெல்த் கிரிக்கெட்: 71 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து, அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து!
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஒரு பிரிவான மகளிர் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நேற்று நடைபெற்ற 12-வது போட்டியில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதின
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 1 ரன்கள் எடுத்தன. இந்த அணியின் இரண்டு வீராங்கனைகள் தவிர மற்ற அனைவரும் சிங்கிள் டிஜிட்டல் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
 
இதனை அடுத்து 72 என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி  17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வெற்றியின் காரணமாக பி பிரிவில் இங்கிலாந்து அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது