திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (21:38 IST)

டெய்லர்-லாத்தம் அபார பேட்டிங்: நியூசிலாந்து சூப்பர் வெற்றி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. பொதுவாக இந்திய அணி முதல் போட்டியில் வென்று வெற்றியை தொடங்கி வைக்கும் நிலையில் இன்றைய போட்டியில் அதற்கு மாறாக தோல்வியை சந்தித்துள்ளது



 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 280 ரன்கள் குவித்தது. விராத் கோஹ்லி மிக அபாரமாக விளையாடி 121 ரன்கள் குவித்தார். இதனையடித்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 49 ஓவர்களில் 284 ரன்கள்எடுத்து வெற்றி பெற்றது. டெய்லர் 95 ரன்களும், லாத்தம் 103 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இரு அணிகளுக்கான அடுத்த போட்டி அக்டோபர் 25ஆம் தேதி புனேவில் நடைபெறவுள்ளது