ஐபிஎல் 2022: 134 இலக்கை எளிதில் அடைந்து வரும் குஜராத்!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி கொடுத்த 134 என்ற இலக்கை மிக எளிதில் குஜராத் அணி எட்டி வருகிறது
இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பியதால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. ருத்ராஜ் 53 ரன்களும் ஜெகதீசன் 39 ரன்கள் எடுத்து உள்ளனர்
இந்த நிலையில் 134 என்ற எளிய இலக்கை நோக்கி தற்போது குஜராத் அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான் சஹா மற்றும் கில் ஆகிய இருவரும் இணைந்து 59 ரன்கள் எடுத்து விட்டனர். இன்னும் ஒரு விக்கெட்டுக்கு விழாத நிலையில் இந்த இலக்கை மிக எளிதில் குஜராத் அணி எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது