ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (21:49 IST)

பஞ்சாப் அணிக்கு ஐதராபாத் கொடுத்த இலக்கு 133 ரன்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. எனவே முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டே 54 ரன்களூம், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும் எடுத்தனர். 
 
பஞ்சாப் அணியை பொருத்தவரையில் ராஜ்புத் மிக அபாரமாக பந்துவீசினார். இவர் 4 ஓவர்கள் வீச் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். முஜீப் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். கேப்டன் அஸ்வின் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை
 
இந்த நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் பஞ்சாப் அணி 133 என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. இலக்கை அடையுமா? அல்லது மும்பை போல் சுருண்டு விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்