செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (11:30 IST)

இந்தியா தடுமாற்றம் –ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கு ஆல் அவுட்

பெர்த் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 14 ) பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆரோன் பிஞ்ச் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். ஆரோன் பிஞ்ச் 50 ரன்களும் ஹாரிஸ் 70 ரன்களும் சேர்த்தனர். அதன் பின் வந்த வீரர்களில் ஷான் மார்ஷ் 45 ரன்களும் டிராவிஸ் ஹெட் 58 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்டமுடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்தனர்.

தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கி விளையாடிய ஆஸ்திரேலியா இன்று மேலும்  46 ரன்கள் சேர்த்து மீதமுள்ள 4 விக்கெட்களையும் இழந்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா 323 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்களையும், பூமரா, உமேஷ் யாதவி, ஹனுமா விஹாரி தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் தடுமாறி வருகிறது. முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 2 ரன்களிலும் வெளியேற புஜாராவும் கோஹ்லியும் களத்தில் நின்று போராடி வருகின்றனர். கோஹ்லி 21 ரன்களோடும் புஜாரா 11 ரன்களோடும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது.