ஜஸ்ட் மேரீட்: போஸ்ட் போட்டு ஷாக் கொடுத்த சாய்னா

Last Updated: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (19:32 IST)
ஹைதராபாத்தை சேர்ந்த சாய்னா நேவால் இந்தியாவின் பாட்மிண்டன் நட்சத்திரங்களில் இருவர். இவருக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. 
 
ஆம், சாய்னா மற்றும் பாருபள்ளி காஷ்யப் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் எனவும் கடந்த அக்டோபரில் செய்திகள் வெளியாகின.
 
ஆனால் இன்று யாருக்கும் தெரியாமல் சைலண்டாக இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணம் டிசம்பர் 16 ஆம் தேதி என எண்ணப்பட்ட நிலையில் இன்று திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். 
 
இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது என்பதே சாய்னா நேவால் ட்விட்டரில் ஜஸ்ட் மேரீட் என போட்டு திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளதால்தான். 
 
சாய்னா திருமண வரவேற்பு விளையாட்டு, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்க ஹைதராபாத் நகரில், டிசம்பர் 16 அன்று நடைபெற உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :