வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (14:19 IST)

தோனியின் ஃபேன்பேஸ் கண்டு நெகிழ்ந்த பேட்கமின்ஸ்

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தபோது, மைதானத்திற்குள் நான் கேட்ட அதிகப்பட்ட சத்தம் இதுவாகத்தான் இருக்கும் என்று பேட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
 
ஐபிஎல்-2024 சீசன் கிரிக்கெட் தொடர் இந்தியாவில்  நடந்து வருகிறது.
 
இதில், சென்னை கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
 
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லீக் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக சன்ரைசஸர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது.
 
இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில் இப்போட்டியின்போது தோனி மைதானத்திற்கு வருகையில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; ஷிவம் துபே ஸ்பின்னர்கலுக்கு எதிராக மிகச்சிறப்பான விலையாடினார். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவுலர்கள் பந்துவீச விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு அவர்கள் தற்போது அதிரடியாக விளையாடிய வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவும் மிகச் சிறப்பாக இருந்தது.  தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும்போது, ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறெங்கேயும் நான் கேட்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.