தொடர்புடைய செய்திகள்
- கோவிலுக்குள் காதலர்கள் செய்த அட்டூழியம் ...ஓட ஓட விரட்டிய பொதுமக்கள் ...
- காதலுக்கு மௌனம் ஒரு தடையில்லை ...இந்தக் காதலர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா...?
- உறவுக்கு வர மறுத்ததால் காதலிக்கு அடி உதை..
- பெண்ணை விட்டு ஓடி விடு ; மிரட்டிய இன்ஸ்பெக்டர் : கழுத்தை அறுத்துக்கொண்ட காதலன் (வீடியோ)
- ஆற்றில் குதித்த காதலி...விஷம் அருந்தி தற்கொலை செய்த மாணவன்
சுக்கிர வழிபாடு காதலர்களை ஒன்று சேர்க்குமா...?
காதலர்களை சேர்க்க, பிரிந்த தம்பதிகளை சேர்க்க, கடவுளை நம்பலாம். காதலை நிறைவேற்றுவதில் சுக்கிர பகவானுக்கு முக்கிய பங்குண்டு. காதலுக்குரிய கிரகம் சுக்கிரன்.
சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். மகிழ்ச்சிக்கும், இனிமையான திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் அருள் அவசியம். அழகு, வசீகரம், பகட்டான வாழ்வு, அதிர்ஷ்டம் அனைத்துக்கும் சுக்கிரனின் பார்வையே காரணம். ஆகவே காதலில் சிக்கல் உள்ளவர்கள் சுக்கிரனுக்கு சில பரிகாரங்களை செய்தால் எளிதில் ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலஷ்மி வழிபாடு செய்தால் காதலில் மகத்தான வெற்றி கிடைக்கும். மாலையில் அம்பாள், அம்மன், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்வது காதலர்களை சேர்த்து வைக்கும்.
சுக்கிரன் தன்னை வழிபடுபவர்களுக்கு சுகம், அழகு, நாவண்மை, நன்மதிப்பு போன்ற நற்பலன்களை அருள்வார். இல்லற சுகத்தை தருபவரும் அவரே. சுக்ர திசை நடக்கும் போது தீயக்கோள்களின் பார்வைபட்டாலோ, தீயச் சேர்க்கை ஏற்பட்டாலோ கெடுதியான பலன்களே உண்டாகும். இதனையே சுக்ர தோஷம் என்பார்கள். சுக்கிரனால் கண்நோய், பால்வினை நோய்கள், சிறுநீரக நோய்கள் உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அடுத்த கட்டுரையில்
