1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

முருகன் அருளை முழுவதுமாய் பெற உகந்த கிருத்திகை விரதம்...!!

மாதந்தோறும் வருகின்ற கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து கந்தனை வழிப்பட்டால் சங்கடங்கள் யாவும் பனித்துளியாய் விலகும். முருகனுக்கு உகந்த  நட்சத்திரம் கிருத்திகை. முருகன் அருளை முழுவதுமாய் பெற உகந்த விரதம் கிருத்திகை விரதம்.

முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை  பூர்த்தி செய்வார்கள்.
 
27 நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வருவது கிருத்திகை நட்சத்திரமாகும். நவகிரகங்களில் சூரிய பகவானின் மிகுதியான ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாக  இருந்தாலும் செவ்வாய் மற்றும் சுக்கிர கிரகங்களின் ஆதிக்கம் ஒரு சேர கொண்ட ஒரு வித்தியாச நட்சத்திரமாக இருக்கிறது கிருத்திகை நட்சத்திரம். 

இந்நட்சத்திரத்தின் தேவதையாக அக்னி பகவான் இருக்கிறார். கிருத்திகை நட்சத்திரம் தமிழர்களின் கடவுளான முருக பெருமானுக்குரிய நட்சத்திரமாகவும்  இருக்கிறது.
 
நிறைவான அறிவு, நிலையான செல்வம், கலையாத கல்வி, நீண்ட ஆயுள், நல்ல வாழ்க்கைத் துணை, குணமுள்ள குழந்தைப் பேறு என்று எல்லா வயதினருக்கும்  கிடைக்கும் பலன்களாக கிருத்திகை விரதம் இருக்கிறது.
 
குடும்பத் தலைவி, இரவில் தூக்கத்தை தவிர்த்து கண் விழித்திருந்து கந்த மந்திரங்களைச் சொல்லி நாளை காலை ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி கந்தனை மன்முருகி வேண்டி, அவனது அடியார்களுக்கு அன்னதானம் செய்து வந்தால் நிச்சயம் சங்கடங்கள் எல்லாம் விலகி வேண்டிய வரம் கிடைத்து முருகனின் பரிபூரண  அருளைப் பெறலாம்.