தொடர்புடைய செய்திகள்
- எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்ட ஆகாச கருடன் கிழங்கு..!
- அஷ்டதிக் பாலகர்கள் யார்? இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன...?
- மீனாட்சியின் அருளை பெற்று தரும் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி...!!
- எல்லா நன்மைகளையும் செல்வங்களையும் அள்ளி தரும் காமதேனு வழிபாடு...!!
- நோய் நீங்கி மரணபயம் போக்கும் ஸ்ரீ பைரவ மூர்த்தி வழிபாடு...!
எந்த திரியை ஏற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்....?
பெரும்பாலான வீடுகளில், பருத்திப் பஞ்சால் செய்யப்பட்ட திரியைத்தான் பயன்படுத்துகிறார்கள். பருத்திப் பஞ்சுத் திரி மட்டுமல்லாது, இன்னும் சில வகைத் திரிகளை விளக்கேற்றுவதற்குப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு திரிக்கும் ஒவ்வொரு வித பலன் உண்டு.
பஞ்சுத் திரி: பருத்திப் பஞ்சைக் கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால் பித்ருக்களால் ஏற்பட்ட சாபமும், வம்சாவளிப் பிரச்னைகளும் நீங்கும்.
மஞ்சள் துணி திரி: மஞ்சள் துணியைக்கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், அனைத்து வியாதிகளும் நீங்கும், செய்வினை போன்ற பிரச்னைகள் நீங்கிப் பூரண அருள் கிட்டும்.
சிவப்பு நிற திரி: சிவப்பு வண்ணத்தினாலான துணியைக்கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், திருமணத் தடை நீங்கும், குழந்தைப் பேறு கிட்டும்.
வெள்ளைத்துணி திரி: வெள்ளைத் துணியைத் திரியாகச் செய்து, பன்னீரில் நனைத்துப் பயன்படுத்தினால், மனக் குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனைகள் உருவாகும்.
வெள்ளெருக்குத் திரி: வெள்ளெருக்கம் பட்டையால் செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால் பொருளாதாரப் பிரச்னைகள் நீங்கி, செல்வ வளம் அதிகரிக்கும்.
தாமரைப்பூ தண்டு திரி: தாமரைப்பூ தண்டைக் கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், முன்வினைக் கர்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கை வளப்படும்.
வாழை நார்த் திரி: வாழைத்தண்டு நாரைக்கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், குடும்பப் பிரச்னைகள், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும்.
அடுத்த கட்டுரையில்
