செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவதால் என்ன பலன்கள்....?

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபட்டால், பெரும் இடையிறுகள் நீங்கும் வாய்ப்பு வரும். கடன் தொல்லை தீரும்; கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பிரம்ம முகூர்த்த நேரம் என்பது ஒருநாளின் அதிகாலைப் பொழுது. 3.30 முதல் 6.00 மணி வரை ஆகும். அந்த அதிகாலை நேரம் தான் பிரம்ம முகூர்த்தம். இந்த நேரத்தில் எழுந்து, படித்தால், அவை மனதில் பதியும் என்பது உறுதி. அதேபோல், பிரம்ம முகூர்த்தத்தில், பெண்கள் படுக்கையை விட்டு எழுந்துவிடுவது நல்லது. 
 
பிரம்ம முகூர்த்த நேரத்தில்தான், தேவர்களும் பித்ருக்களும் நம் இல்லங்களுக்கு வருவார்கள் என்பதாக ஐதீகம். எனவே அந்த சமயத்தில் நாம் தூங்கிக்  கொண்டிருந்தால், வரவேற்காமல் இருக்கிறார்களே என்று அவர்கள் திரும்பிச் சென்று விடுவார்களாம்.
 
எனவே, தினமும் காலையில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்து திருநீறு இட்டு இறைவனை வேண்டி வாங்கி வந்தால் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் கூறுவதுண்டு. பின்னர், வாசலில் அரிசி மாவுக்கோலமிடுவது சிறந்தது. அடுத்து பிரம்மமுகூர்த்தத்தில். அதாவது சூர்யோதயத்துக்கு  முன்னதாகவே விளக்கேற்ற வேண்டும்.
 
மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே விளக்கேற்றி வழிபடவேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில், வீட்டில் விளக்கேற்றி வைத்து, சிவ மந்திரம் சொல்லலாம். அப்படி சொல்லச் சொல்ல, உள்ளுக்குள்ளேயும் வீட்டினுள்ளேயும் நல்ல அதிர்வுகள் பரவும். அதனால், நேர்மறையான சிந்தனைகள் தோன்றும்.
 
பலன்கள்:
 
வீட்டில் இருந்த கஷ்ட நிலை மாறும். கடன் தொல்லை தீரும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும்.