திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சனி பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இதை செய்தாலே போதும் !!

நவக்கிரகங்களில் சனி பகவான் என்றாலே நமக்கு ஒரு தனி மரியாதை தான். நியாயத்திற்கும், நீதிக்கும் கட்டுப்பட்டவர் சனி பகவான். 

சனி பகவான் கெடுதல்களை கொடுத்தாலும் சனி கொடுக்க நினைத்தால் எவராலும் தடுக்க முடியாது என்பதால் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் திக்குமுக்காட செய்யும் அளவிற்கு நம் வாழ்க்கையே தலைகீழாக மாற்றி விடக்கூடிய சக்தியும் இவரிடம் உண்டு. நீதிமானாக விளங்கும் சனி பகவான் கொடுக்கும்  இன்னல்களிலிருந்து விடுபெற சொல்ல வேண்டிய கவசம் தான் சனி கவசம்.
 
இந்த சனி கவசத்தை மனம் உருகி பாராயணம் செய்பவர்களுக்கு சனி பாதிப்புகள் நிச்சயம் குறையும் என்பது நம்பிக்கை. இந்த கவசத்தை ஏழரை சனி, அஷ்டம  சனி, அர்த்தாஷ்டம சனி, சனி தசை நடப்பவர்கள் ஆகியோர் சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதிக்குச் சென்று எள் தீபம் ஏற்றி அமைதியாக அமர்ந்து மனம்  உருகி பாடலாக பாடவேண்டும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் நீங்கள் செய்து வர சனி பகவான் கொடுக்கும் துன்பங்கள் நீங்கி, உங்களுடைய நல்ல கர்ம  வினைக்கு ஏற்ப நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுக்கு நல்லதையும் செய்வார்.
 
நவகிரகங்களில் எந்த கிரகத்துக்கும் இல்லாத ஈஸ்வர பட்டம் சனீஸ்வரர் ஒருவரையே சார்ந்துள்ளது. எந்த கடவுள் வரத்தை கொடுத்தாலும் அதை மற்றவர்கள் தடுத்துவிட முடியும். ஆனால் சனி கொடுக்க எவராலும் தடுக்க முடியாது. 
 
சனிபகவானை முழுமையாக சரண் அடைந்தவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் என்பதே இருக்காது. எனவே சனி கவசத்தை நம்பிக்கையுடன், பக்தியுடன் பாராயணம்  செய்யுங்கள், நல்லது நடைபெறும்.