1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் என்ன...?

அமாவாசை தினத்தில் நம்முடைய முன்னோர்களின் நன்மைக்காக நாம் செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளது. தாய் தந்தையை இழந்தவர்கள் தங்களுடைய பெற்றோருக்கு கொடுக்க வேண்டிய தர்ப்பணத்தை தவறாமல் கொடுத்து விட வேண்டும்.

அமாவாசை நாளில் வீட்டில் முறைப்படி கட்டாயம் பூஜை புனஸ்காரங்களை செய்து விடவேண்டும். இதோடு சேர்த்து நாளையதினம் சாதத்துடன் எள்ளு தயிர் சேர்த்து பிசைந்து காகத்திற்கு வைக்க மறக்கக்கூடாது. இது நம்முடைய முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக.
 
அமாவாசை தினத்தில் கட்டாயமாக குலதெய்வ வழிபாடு நன்மை தரும். குடும்பத்தோடு வீட்டில் இருந்தபடியே உங்கள் குலதெய்வத்தை நினைத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குலதெய்வத்தை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால் அந்த வேண்டுதல் உடனே பலிக்கும். இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர இந்த  நாளில் வேண்டுதல் வைக்கலாம். 
 
உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது அம்மன் தெய்வங்கள் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று, ஒரு எலுமிச்சம் பழத்தை அம்மன் மடியில் வைத்து, அந்த  எலுமிச்சம் பழத்தை வாங்கி வீட்டு பூஜை அறையில் வைத்தால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி விரட்டி அடிக்கப்படும்.
 
இவ்வாறாக மேல் சொன்ன விஷயங்களை இந்த அமாவாசை தினத்தில் மட்டுமல்ல மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை அன்று உடல் சுத்தத்துடன் சேர்ந்த  மனத்தூய்மையோடு பின்பற்றி வந்தாலே வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகள் தானாக படிப்படியாக குறைவதை உணர முடியும்.