வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடி கொண்டிருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா...?

Devi Mahalakshmi
Sasikala|
வீடு செழிப்பாக சுபிட்சத்துடன் இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் வெள்ளிக்கிழமை நிலை வாசலில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி  தெரிந்துக்கொள்வோம்.

வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை வேலைகள் எல்லாவற்றையும் நாம் இப்போது வியாழக்கிழமை அன்றே முடிந்து விடுகின்றோம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. இருப்பினும் உங்கள் நிலை வாசப்படிக்கு செய்ய வேண்டிய வேலைகளை மட்டும் வெள்ளிக்கிழமையில் செய்வது நன்மை தரும்.
 
அதாவது வீட்டில் இருக்கும் பெண்ணும், மகாலட்சுமிக்கு இணையாக சொல்லப்பட்டு உள்ளார்கள். அந்த மகாலட்சுமி குடிகொண்டிருக்கும் இடம் நிலைவாசல். வீட்டிலிருக்கும் பெண் எப்படி வெள்ளிக்கிழமை காலை வேளையில் சுத்தமாக குளித்துவிட்டு மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து தலையில் பூவைச் சூடிக் கொள்கிறாளோ, அதற்கு இணையாக வெள்ளிக்கிழமை அன்று காலை நேரத்தில் நிலை வாசல் படிக்கு அலங்காரம் செய்ய வேண்டும்.
 
பெரியதாக ஒன்றும் இல்லை. வெறும் ஈரத்துணியை கொண்டு நில வாசலை சுத்தமாக துடைத்து, பின்னர் உலர்ந்ததும் வாசலுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு  வைத்து வாசலுக்கு இரண்டு  பக்கமும் பூ வைத்து, மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் வேண்டிக்கொண்டு, வாசல் காலுக்கு மேலே ஒரு மாக்கோலம் போட்டு,  அதன் பின்பு பூஜை அறைக்கு வந்து வெள்ளிக்கிழமை பூஜையை செய்ய வேண்டும்.
 
வெள்ளிக்கிழமை பூஜையை நிறைவு செய்துவிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து மனதார குலதெய்வத்தையும், காவல் தெய்வத்தையும் வேண்டிக்கொண்டு அந்த  எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் தடவி அதை உங்களுடைய நிலைவாசல் இரண்டு பக்கமும் வைத்து விடுங்கள் போதும். உங்களுடைய வீட்டிற்கு  எந்த ஒரு பெரிய கஷ்டமும் நுழையாது. உங்கள் வீடு தெய்வ சக்தியின் பாதுகாப்பில் இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :