புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 11 டிசம்பர் 2021 (19:05 IST)

பித்ரு தோஷம் வருவதற்கான காரணங்களும் பரிகாரங்களும் என்ன தெரியுமா...?

பித்ரு தோஷம் வருவதற்கான காரணங்கள் கருச் சிதைவு செய்து கொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மனவேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். 

ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்ய வேண்டும். 
 
ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்கா விட்டால் வரும். துர்மாணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப் பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யா விடில் பித்ருதோஷம் வரும். 
 
பித்ரு தோஷம் நீங்க பரிகாரம் ராமேசுவரம் சென்று சில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலஹோமம் செய்ய வேண்டும். 
 
அனைவரும் இயற்கைமரணம் அடைந் திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டிய தில்லை. தாய் தந்தையருக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை சரியாக செய்வதோடு. நமது முன்னோர்களை முறையாக வழிபட்டால் இதுபோன்ற தோஷங்களில் இருந்து தப்பிக்கலாம்.