திருஷ்டி கழிக்கும் முறைகளும் அற்புத பலன்களும் !!
அமாவாசை, பவுர்ணமி போன்ற முக்கிய தினங்களில் உச்சிவேளையில் வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு திருஷ்டி கழிக்கலாம்.
கடல் நீரை கொண்டு வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் விலகும். எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின் மேல் குங்குமம் பூசி திருஷ்டி சுற்றி வீசி எறியலாம்.
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை மாலை என இருவேளையும் சாம்பிராணி தூள், கருவேலம்பட்டை தூள், வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீட்டில் தூப தீப புகை காட்டினால் அனைத்து வகையான திருஷ்டிகளும் தீய சக்திகளும் வீட்டை விட்டு வெளியேறும் என்பது நம்பிக்கை.
செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் பூசணிக்காயை வைத்து வீட்டில் திருஷ்டி சுற்றி போடலாம்.
கிரகபிரவேச சமயங்களில் வீட்டில் பசுவையும், கன்றையும் வீட்டிற்கு அழைத்து வருவதை பார்த்திருப்போம். கோமாதா வீட்டிற்குள் வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அது போல திருஷ்டி இருக்கும் வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பசுவை வீட்டிற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்களும், திருஷ்டிகளும் நீங்கும்.